நோயாளிகளைக் கொலை செய்வதாகத் தெரிவித்து காணொளி வெளியிட்ட செவிலியர்கள் பணி இடைநீக்கம்!

0
4

இஸ்ரேலிய நோயாளிகளைக் கொலை செய்யப் போவதாகத் தெரிவித்து கணொளி ஒன்றை வெளியிட்ட அவுஸ்திரேலிய செவிலியர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த காணொளியில் இந்த இரு செவிலியர்களும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றும் செவிலியர்களே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை இவர்கள் இருவரையும் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.