பங்களாதேஷின் ஆலோசகர் நஹித் இஸ்லாம் இராஜிநாமா!

0
28

பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் ஆலோசகராக செயற்பட்டு வந்த நஹித் இஸ்லாம் திடீரென்று தனது ஆலோசகர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

இதற்கான கடிதத்தை அவர் நேற்று (25) பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸிடம் வழங்கியுள்ளார்.

இதுபற்றி நஹித் இஸ்லாம் கூறுகையில்,

 ‛‛அமைச்சரவையில் இருந்து விலகிக் கொள்ள நான் முடிவு செய்தேன். அதேபோல் புதிய கட்சியை தொடங்கவுள்ளேன். இந்தக் கட்சி பெப்ரவரி 28 ஆம் திகதி தொடங்கப்படும்” என கூறியுள்ளார்.

இதன்மூலம் பங்களாதேஷில் புதிய அரசியல் கட்சி உருவாவது உறுதியாகியுள்ளது. இந்த கட்சிக்கு தலைவர் யார் என்பது பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை.

நஹித் இஸ்லாமே அந்த கட்சியின் தலைவராக செயல்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கதாகும்.