பங்களாதேஷ் – மே. இ. தீவுகள் இடையே T20 தொடர் 15ஆம் திகதி ஆரம்பம்

0
34

பங்களாதேஷ் – மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி – 20 தொடர் நாளை தொடங்குகிறது.

பங்களாதேஷூக்கு எதிரான ரி – 20 போட்டித் தொடரில் விளையாடவுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான ரி – 20 தொடர் நாளை மறுதினம் 15ஆம் திகதி தொடங்குகிறது.

இந்தத் தொடரில் விளையாடவுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு ரோவ்மன் பவல் தலைவராகவும், பிரண்டன் கிங் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கீசி கார்டி, ஜோன்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் கீரிவஸ், டெரன்ஸ் ஹிண்ட்ஸ், அல்ஜாரி ஜோசப், எவின் லூயிஸ், ஓபெட் மெக்காய், குடகேஷ் மோடி, நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஸ்பிரிங்கர், அகேல் ஹொசைன் (முதல் இரு போட்டிகளுக்கு மட்டும்), ஜெய்டன் சீல்ஸ் (3ஆவது போட்டிக்கு மட்டும்) ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.