28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

படுகொலைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மீட்பு

அஹுங்கல்லவில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக துப்பாக்கிதாரிகள் வந்த மோட்டார் சைக்கிளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அஹுங்கல்ல கரிஜ்ஜபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாலமொன்றுக்கு அருகில் உள்ள கால்வாயில் மூழ்கடிக்கப்பட்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

அந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாதாள உலக உறுப்பினரான கொஸ்கொட சுஜீயின் உறவினர் ஒருவரை சுட்டுக் கொன்றனர்.

கொஸ்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியான “மஞ்சு” என அழைக்கப்படும் குசும் குமார மென்டிஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles