பண தகராறில் ஒருவர் கொலை

0
124

வீரகெட்டிய ரன்ன வீதியில் தலுன்ன சந்தியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இக்கொலை நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

ரன்ன கஹதமோதர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சதிஸ் திலங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் ஹூங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பண தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.