சிலாபம் – மாரவில பகுதியில்இ பணிநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர்இ போலியான காவல்துறை அடையாள அட்டையை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் உந்துருளியை செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் குறித்த நபரை நிறுத்தி சிலாபம் போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர்கள் சோதனையிட்டுள்ளனர்.
அதன்போதுஇ தாமும் காவல்துறையை சேர்ந்தவர் எனக்கூறிய குறித்த நபர் அடையாள அட்டையொன்றைச் சமர்ப்பித்துள்ளார்.குறித்த அடையாள அட்டை தொடர்பில் சந்தேகம் எழுந்தமையினால் தொடர்ந்தும் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகநபர் ஹட்டன் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது சேவையிலிருந்து விலகுமாறு பணிக்கப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், போலியான காவல்துறை அடையாள அட்டையைத் தயாரித்தமை மற்றும் மதுபோதையில் உந்துருளியை செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டில் சந்தேகநபரை கைதுசெய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.