29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பண்டாரகம சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து

பண்டாரகம சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் ஓய்வு அறையில் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பம்புகள் நிறுவப்பட்ட இடத்திற்கு அருகிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் வரிசையில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குறித்த சந்தர்ப்பத்தில் ஹொரணை மாநகர சபையின் தீயணைப்புத் துறை அதிகாரிகள் வந்து தீயை முற்றாகக் கட்டுப்படுத்தினர். தீயை அணைக்கும் முயற்சியில் பௌசர் சாரதி ஒருவரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles