பறவைகள் சரணாலய உரிமையாரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

0
10

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் ஹம்பாந்தோட்டை நாகரவெவ பறவைகள் சரணாலய உரிமையாளரை, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் கடந்த 17 ஆம் திகதி நாரஹேன்பிட்ட பகுதியில் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் சமீபத்தில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மீட்கப்பட்டன. 

இந்த மோட்டார் சைக்கிள்கள் ஒவ்வொன்றின் மதிப்பும் 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

இதற்கிடையில், பறவைகள் சரணாலய வளாகத்தில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 4 கஞ்சா செடிகளுடன், சரணாலயத்தின் மேலாளர் மற்றும் களஞ்சிய கட்டுப்பாட்டாளர் ஆகியோரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.  

கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை மற்றும் மித்தெனிய பகுதிகளைச் சேர்ந்த 40 முதல் 50 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.