இவ்வுலகம் பலவான்களின் உலகம் என்பதை நிரூபிக்கும் வகை யில் அவ்வப்போது சில உலக நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு. உக் ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து மீண்டுமொரு முறை இது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. 2014இலும் உக்ரைன்மீது ரஷ்யா படை யெடுத்திருந்தது. இந்த யுத்தத்தின் போது 14,000 அளவிலான மக்கள் கொல்லப்பட்டனர். இப்போது மீண்டும் உக்ரைன்மீது ரஷ்யா இராணுவ
நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின்
செயலாளர் நாயகம் ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் படையெடுப்பை கைவிடு
மாறு கோரியிருந்தார். ஆனால், புடின் அதனை கருத்தில் கொள்ள வில்லை.
இது எதனை காண்பிக்கின்றது. பலம்பொருந்திய நாடுகளை கட்டுப் படுத்துவதற்கு இவ்வுலகில் எந்தவொரு சட்டமும் இல்லை. சர்வதேச
சட்டம் எப்போதும் பலவீனர்களுக்கான ஆயுதமாகவே இருக்கின்றது.
சர்வதேச ரீதியில் நீதியை உறுதிப்படுத்துவதற்கான அமைப்புக்கள் என்று
நாம் கருதிக் கொண்டிருக்கும் சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்ற
வியல் நீதிமன்றம் ஆகியவற்றை பலம்பொருந்திய நாடுகள் ஒரு பொருட்
டாகவே மதிப்பதில்லை. 2019ஆம் ஆண்டு, அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் போர் குற்றங்களில் ஈடுபட்டன எனக் கூறி, சர்வதேச
குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதம விசாரணை அதிகாரி – அமெரிக்கா
விற்குள் பிரவேசிக்க முற்பட்டார்.
அவர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்
பப்பட்டார். அப்போது, அமெரிக்க இராஜாங்க செயலராக இருந்த மைக்
பொம்பியோ, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஒரு கங்காரு நீதி
மன்றம் என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது, உத்தியோகபற்றற்ற, ஆதாரங்களற்று வாதிடுகின்ற ஒரு நீதிமன்றம் – இப்படியான ஒன்றுக்கு
பதிலளிக்க வேண்டிய அவசியமில்லையென்று பொம்பியோ குறிப்பிட்டி
ருந்தார். விடயம் அத்தோடு முடிந்துவிடவில்லை. 2020இல், சர்வதேச
குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதம விசாரணை அதிகாரிக்கும், அவரின்
குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை
விதிக்கப்பட்டது.
இதே ஆண்டுதான், இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
வுக்கும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான பயணத் தடை விதிக்கப்
பட்டது. இந்த விடயங்கள் எதனை உணர்த்துகின்றன? பலம்பொருந்திய
நாடுகளை கட்டுப்படுத்த எந்தவொரு சட்டமும் இவ்வுலகில் இல்லை.
பலம்பொருந்திய நாடுகள் தங்களின் தேவைக்கு ஏற்ப உலக அரசியலை
எப்போது வேண்டுமானால் வளைக்கக்கூடிய ஆற்றலை கொண்டிருக்
கின்றன. உலக அமைதியென்பது, பலம்பொருந்திய நாடுகளுக்கிடை
யிலான உடன்பாடுகளாலும், முரண்பாடுகளாலும்தான் தீர்மானிக்கப் படுகின்றது.
சோவியத் யூனியனின் உடைவைத் தொடர்ந்து, உருவான நாடுகளில்
ஒன்றுதான் உக்ரைன். ஆனால், அதனை ஒரு நாடாகவே ரஷ்யா ஏற்
றுக்கொள்ளவில்லை. விளாடிமிர் புடின், ரஷ்யாவை தவிர, ஏனைய
உடைந்த பகுதிகள் எவையுமே உண்மையான நாடுகளல்ல என்று
குறிப்பிடுகின்றார். இந்த பின்புலத்தில்தான், 2014இல், உக்ரைன்மீது
படையெடுத்தார். உக்ரைனின் கிழக்கு பகுதிகளை சுயாதீன பகுதிகளாக
அறிவித்தார். அந்தப் பகுதியின் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவி
வருகின்றது. ரஷ்யாவின் உண்மையான பிரச்னை என்ன?
உக்ரைன் நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்
ளப்படுவதை புட்டின் எதிர்க்கின்றார். உக்ரைன் நேட்டோவில் இணையு
மானால், ரஷ்ய எல்லையில் நேட்டோவின் படை விரிவாக்கத்தை தடுக்க
முடியாது. இவ்வாறானதொரு சூழலில்தான் உக்ரைனை பலவீனப் படுத்தும் நோக்கில் புடின், படையெடுப்பை மேற்கொண்டிருக்கின்றார். புடினின், இராணுவ நடவடிக்கையை உலகில் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. வேண்டுமானால் யுத்தம் செய்யலாம். ஒரு பலம்பொருந்திய நாடு, தனது எல்லைப் புறங்களில், அயல்நாடுகளில் எந்நேரத்திலும் தலையீடு செய்யும் ஆற்றலை கொண்டிருக்கின்றது. இந்த பலம்பொருந்திய நாடுகளினால் தீர்மானிக்கப்படும் உலக ஒழுங்கில்தான், நாம் நீதியைக் கோரி வருகின்றோம். பலம்பொருந்திய நாடு – அல்லது நாடுகளின் தலை யீடு இல்லாமல் அவ்வாறான நீதியும் சாத்தியப்படப் போவதில்லை.