தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியில் பலூனை விழுங்கிய 7 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. பலூன் தொண்டையில் சிக்கி ஏற்பட்ட மூச்சுத்திணறலால் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
பலூனை விழுங்கியதே மரணத்திற்குக் காரணம் எனப் பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.