பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக்தாரை சந்தித்தார் விஜித்த ஹேரத்!

0
2

மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அங்கு பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான செனட்டர் மொஹம்மட் இஷாக்தாருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 58 ஆவது ஆசிய நாடுகள் சங்கம் (ASEAN) பிராந்திய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மலேசியா சென்ற வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அங்கு பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான செனட்டர் மொஹம்மட் இஷாக் தாருடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது, இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான நீண்டகால நட்புறவு குறித்து பேசப்பட்டதுடன், உயர் மட்ட சந்திப்புகள், பொருளாதார ஒத்துழைப்பு, மதப் புனித யாத்திரைகள் மற்றும் கல்வி கூட்டாண்மைகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதேவேளை, பரஸ்பர பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சிகள் குறித்தும் இதன் போது கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கமாகவும் இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டு நம்பிக்கையை மறுபடியும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.