பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த வாரம் தொடருந்து கடத்தலில் ஈடுபட்ட பலுச் விடுதலை படையினர்இ நேற்று பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் சென்ற இராணுவ வாகனத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.குறித்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்
இந்த தாக்குதல் தொடர்பான பரபரப்பூட்டும் காணொளியை பலுச் விடுதலை படையினர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.