பாகிஸ்தானில், வாராந்த சந்தையில் தீ விபத்து!

0
54

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாத்தில் உள்ள வாராந்த சந்தையொன்றில், நேற்று ஏற்பட்ட தீ விபத்தினால், 500 ற்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
‘இத்வார் பஸார்’ என அழைக்கப்படும் இந்த வாராந்த சந்தையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள வாராந்த சந்தையில், 2 ஆயிரத்து 700 ற்கும் அதிகமான கடைகள் இயங்கி வந்தன.ஆடைகள் மற்றும் பாதணிகள் பிரிவில், தீ விபத்து ஏற்பட்டதாகவும், விரைவில் ஏனைய பகுதிகளுக்கும் தீ பரவியதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீயை அணைப்பதற்காக, 31 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்தினால், உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.
எனினும், சுமார் 500 முதல் 700 கடைகள் தீக்கிரையாக்கியுள்ளதாக, தலைநகர அபிவிருத்தி அதிகார சபை தலைவர் அலி ரந்தாவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில், கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தினால், 80 கடைகள் தீக்கிரையாகின.அவற்றில் பெரும்பாலானவை, பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் என்பதுடன், அதில் மூவர் காயமடைந்திருந்தனர்.