பாகிஸ்தான் – சீனாவுடனான விண்வெளி ஒப்பந்தம் கைச்சாத்து!

0
13

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரை விண்வெளிக்கு அனுப்புவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. அதன்படி சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது
அதன்படி சீனாவின் விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான C MSA பாகிஸ்தானிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு முறையான பயிற்சிகளை வழங்கி, விண்வெளிக்கு அனுப்பி வைக்கத் தீர்மானித்துள்ளது.

இதற்கு பாகிஸ்தானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான SUPARCO உதவியாக இருக்குமென தெரிவித்துள்ளது. அண்மையில் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமருடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு பின்னர் தீர்மானம் எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானின் செயற்கைக்கோள்களை சீனா விண்வெளிக்கு அனுப்பியது.
இந்நிலையில்,சீனாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரை இணைத்துக்கொள்வது சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.