பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து விலக்கப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர்!

0
4

ஒப்பந்தக் கடமைகளை மீறியதாகக் கூறி தென்னாபிரிக்காவின் சகலதுறை வீரர் கோர்பின் போஷ் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான சட்டப்பூர்வ அறிவிப்பைப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவருக்கு அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடருக்காக பெஷாவர் சல்மியா அணியுடன் அவர் ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தார்.

இதனிடையே, இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்காக அவர் மும்மை இந்தியன்ஸ் அணியுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தார். அதற்கமைய, கடந்த 8 ஆம் திகதியன்று காயமடைந்த லிசாத் வில்லியம்ஸுக்குப் பதிலாக அவர் அணியில் இடம்பெறுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்தது.இந்தநிலையிலேயே, அவரை பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து விலகுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

முதல் தடவையாக இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரும், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரும் ஒரே காலப்பகுதியில் இடம்பெறுகிறது. அதற்கமைய, இந்தியன் ப்ரீமியர் லீக் எதிர்வரும் 22 ஆம்திகதி முதல் மே மாதம் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், பாகிஸ்தான் சுப்பர் லீக் எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் மே மாதம் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.