பாண்டிச்சேரி – காங்கேசன்துறை இடையே கப்பல் சேவை ஜனவரியில் ஆரம்பம்!

0
170

இந்தியா பாண்டிச்சேரிக்கும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள மதத் தலங்களுக்கு யாத்திரை செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கும் பயணிகள் கப்பல் சேவை பெரும் நிவாரணமாக அமையும் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஒரு பயணிக்கான கட்டணமா 60 அமெரிக்க டொலர் நிர்ணயிக்கப்படுவதோடு, 100 கிலோ எடையுள்ள பொருட்களை ஒருவர் எடுத்துச் செல்லமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.