பாப்பரசரின் இறுதிச்சடங்கில் ட்ரம்ப் பங்கேற்க திட்டம்

0
3

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த 21ஆம் திகதி நித்திய இளைப்பாறினார்.பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாப்பரசரின் இறுதிச்சடங்கு 26ஆம் திகதி நடைபெற உள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பாப்பரசர் பிரான்சிஸின் உடல் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அதன்பின்னர், உலக நாடுகளின் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் பாப்பரசரின் புகழுடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கிறார். இதற்காக அவர் வெள்ளிக்கிழமை (25) காலை தனிவிமானம் மூலம் இத்தாலியின் ரோம் நகருக்கு செல்லவுள்ளார்.அதன்பின்னர், சனிக்கிழமை (26) நடைபெற உள்ள பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளார் . இறுதிச்சடங்கிற்குப்பின் சனிக்கிழமை மாலை அவர் அமெரிக்கா திரும்புகிறார்.