பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து டலஸ் அழகபெரும தலைமையிலான எம்பிக்கள், பாராளுமன்ற வளாகத்தில் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜீ.எல்.பீரிஸ் எம்.பி
அரசாங்கம் இன்று ஆரம்பித்துள்ள ஒடுக்குமுறையானது நாட்டுக்குள் மட்டுமல்ல பாராளுமன்ற அமர்விலும்கூட முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேருக்கு கருத்து தெரிவிப்பதற்கான உரிமையைக்கூட இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் அரசாங்கம் வழங்கவில்லை.
மிகவும் முக்கியமான விவாதமே இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
தேசிய வருமானத்தை அதிகரிப்பதற்கான உபாய மார்க்கங்கள் தொடர்பிலான விவாதமே பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது.
இது தொடர்பில் கதைப்பதற்கு எமது இந்த 13 உறுப்பினர்களுக்கும் மிக முக்கியமான பல்வேறு விடயங்கள் உள்ளன.
எனினும் அந்த வாய்ப்பை இந்த அரசாங்கமானது தட்டிப்பறித்துள்ளது.
நாம் கருத்துக்களை தெரிவித்துவிடுவோம் என்பதில் இந்த அரசாங்கம் அச்சம்கொண்டுள்ளதா என்றே நான் கேட்கின்றேன்.
பேச்சு சுதந்திரம் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை சிறிது சிறிதாக பறித்துக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதம் குறித்து கதைப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
பாராளுமன்ற ஜனநாயகத்தை முழுமையாக மீறும் அதேபோன்று அழிக்கும் செயற்பாடே இது.
தேசிய சபையை உருவாக்கி அனைவரும் ஒன்றாக இருந்து பணியாற்றுவோம் என்று பாராளுமன்றத்தில் கூறிக்கொண்டு கருத்து தெரிவிப்பதற்குக் கூட எமக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதில்லை.
இன்று நாட்டில் பாரிய எதிர்ப்பலைகள் எழுந்தவண்ணம் உள்ளன. பயங்கரவாத செயற்பாடுகளுக்காக அல்ல.