பி.சி.சி.ஐ. கூட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஷாருக்கான்

0
43

ஐ.பி.எல். தொடரின் 18-ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அந்தத் தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்படவுள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஐ.பி.எல். உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பி.சி.சி.ஐ. தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளரான ஷாருக்கானுக்கும் பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளர் நெஸ் வாடியாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு அணியும் எவ்வளவு வீரர்களை ரீ-டெய்ன் செய்யலாம் என்ற விவாதத்தில் மிக குறைவான வீரர்களையே ரீ-டெய்ன் செய்யவேண்டும் என்று நெஸ் வாடியா தெரிவித்தக் கருத்தால் ஷாருக்கானுக்கு அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், டில்லி கெபிடல் அணி உரிமையாளர் கிரண் குமார் கிராந்தி, லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ரூபா குருநாத், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் ராஜஸ்தான் ரொயல்ஸ் உரிமையாளர் மனோஜ் படலே ஆகியோர் கலந்து கொண்டனர்.

மற்ற அணிகளின் உரிமையாளர்கள் “கொன்பரன்ஸ்“ மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.