பிலிப்பைன்ஸின் துணை ஜனாதிபதி சாரா டுடெர்டின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டத்தை அடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் முடிவுசெய்துள்ளது .
பொது நிதியிலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை பயன்படுத்தியதாகவும் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் ‘பாங்பாங்’ மார்கோஸை படுகொலை செய்வதாக மிரட்டியதாகவும் டுடெர்ட்டே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பிரதிநிதிகள் சபையின் 306 உறுப்பினர்களில் மொத்தம் 215 பேர் துணை ஜனாதிபதி சாரா டுடெர்டை பதவி நீக்கம் செய்ய வாக்களித்துள்ளனர்.
இது மசோதா நிறைவேற்றப்படுவதற்குத் தேவையான மூன்றில் ஒரு பங்கு வரம்பை விட அதிகமாகும். இந்த மசோதா தற்போது 24 உறுப்பினர்களைக் கொண்ட செனட்டால் விசாரிக்கப்படும்.துணை ஜனாதிபதி சாரா டுடெர்டே குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்இ டுடெர்ட்டே தனது பதவியிலிருந்து நீக்கப்படுவார்.
மேலும் பிலிப்பைன்ஸ் வரலாற்றில் பதவி நீக்கம் செய்யப்படும் முதல் துணை ஜனாதிபதி இவர் ஆவார் .செனட் தனது தீர்ப்பை வழங்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் விசாரணை தீர்மானிக்கப்படவில்லை .