இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் உள்ள தொடருந்து நிலையமொன்றில் நேற்றைய தினம் (15) ஏற்பட்ட சனநெரிசலில் சிக்குண்டு 3 சிறுவர்கள் உள்ளடங்களாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரயாக்ராஜ் பகுதியில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்பதற்காகத் தொடருந்தில் ஏறுவதற்கு முயற்சித்த பயணிகளே இவ்வாறு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசல் காரணமாக மூச்சுத் திணறலால் பல பயணிகள் மயக்கமடைந்ததாகச் சம்பவத்தை நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்தியத் தொடருந்து துறை அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.