புத்தளத்தில் மஞ்சள் மீட்பு!

0
61

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் – பள்ளிவாசல்பாடு கடற் பிரதேசத்தில், ஒரு தொகை மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.

வட மேற்கு கடற்படை கட்டளையின், புத்தளம் தம்பபண்ணி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர், சந்தேகத்திற்கு இடமான முறையில், கரையை வந்தடைந்த படகை சோதனை செய்தனர்.

இதன் போது, குறித்த படகில் 44 மூடைகளில், ஆயிரத்து 373 கிலோ 700 கிராம் மஞ்சள் மீட்கப்பட்டதுடன், படகில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.