பெண் ஒருவரை தீ வைத்து எரித்தவர் கைது

0
80

பெண்ணொருவரை தீ வைத்து எரித்து  படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொரட்டுவை – கட்டுகுருந்த பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி, எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் நுழைந்து பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் எகொடஉயன பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொடஉயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.