இந்தியாவின் கொல்கத்தா நகரில் உள்ள ஆர்.ஜி.கர் வைத்தியசாலையில் பயிற்சி நிலை வைத்தியர் ஒருவர் கடந்த மாதம் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதிகோரி சர்வதேச ரீதியில் பாரிய போராட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புலம்பெயர் இந்தியர்களினால் 25 நாடுகளில் 130ற்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பான், அவுஸ்ரேலியா, தாய்வான், சிங்கப்பூர் மற்றும் ஜரோப்பிய நாடுகளிலும் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.