பெரிய வெங்காய இறக்குமதி தொடர்பில் இன்று தீர்மானம்

0
58

இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை அரசாங்கத்தின் ஊடாக இறக்குமதிய செய்வதா? அல்லது தனியார் மூலம் இறக்குமதி செய்வதா? என்பது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

10,000 மெட்ரிக் டன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில், பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததன் மூலம், நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலையும் சடுதியதாக அதிகரித்தது.

இதற்கிடையில், இறக்குமதி செய்யப்படும் இந்திய பெரிய வெங்காயத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு 10 முதல் 15 நாட்கள் வரையாகும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.