பெறுமதி சேர் வரி, தொலை தொடர்பு வரி உயர்வு!

0
152

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரியை 8 வீதத்திலிருந்து 12 வீதமாகவும், தொலைத் தொடர்பு வரியை 11.25 வீதத்திலிருந்து 15 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பாராளுமன்றின் அங்கீகாரத்துடன், வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதேசமயம்,வருமான வரியும் ஒக்ரோபர் முதலாம் திகதியிலிருந்து அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தனிநபர் வருமான வரி சலுகையை 30 இலட்சம் ரூபாயிலிருந்து 18 இலட்சம் ரூபாயாகக் குறைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.