பெல்மடுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி, 8 பேர் காயம்!

0
136

இரத்தினபுரி – பெல்மடுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம் பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் சம்பவத்தில் குழந்தை ஒருவர் உள்ளிட்ட எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

பேருந்து ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதுண்டமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.