பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 40 மீன்பிடி படகுகளில் டெங்கு நுளம்புகள்!

0
93

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 40  மீன்பிடி படகுகளில் டெங்கு நுளம்புகள் இனங்காணப்பட்டுள்ளதாக களுத்துறை சுகாதார மற்றும் மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

களுத்துறை சுகாதாரப் பிரிவு மற்றும் பேருவளை வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து இன்று மேற்கொண்ட நடவடிக்கையின்போதே டெங்கு நுளம்புகள் இருக்கும் படகுகள் இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர காவல்படை அதிகாரிகள், கடற்படையின் அதிவேக கப்பல்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.