எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சுயேட்சைக் குழுக்கள் சில இன்றைய தினம் கட்டுப்பணங்களைச் செலுத்தின. ஏறாவூர் நகர முன்னாள் வர்த்தக சங்க செயலாளரும் சமூக சேவையாளருமான அஸனார் முஹமட் அஸ்மி தலைமையிலான சுயேட்சைக்குழுவும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையிலான சுயேட்சைக் குழுவினரும் கனகசூரியம் சோமஸ்கந்தமூர்த்தி தலைமையிலான சுயேட்சைக் குழுவும் இன்று தமது கட்டுப்பணங்களைச் செலுத்தினர். நவம்பர் மாதம் 14ம் திகதி நாடளாவிய ரீதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.