எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட ஏனைய கட்சிகள் முன்வராவிட்டால் தமிழ் அரசுக் கட்சி, தனித்து தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று மாலை மன்னாரில் ஊடக சந்திப்பை நடத்திய வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.