பொதுநலவாய நாடுகளின் கழகங்களுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கையில் இருந்து சென்ற ஜப்பான் கராத்தே தோ இத்தோசுக்காய் கழகத்தை சேர்ந்த கு.யதுர்சயன், புமுதினி மற்றும் திதுனியா ஆகியோர் தனிநபர் காட்டா போட்டியில் வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சிகளை சிஹான்.R.J.அலெக்சான்ரர் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தபோட்டி அண்மையில் தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் நடைபெற்றது.