அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முன்பள்ளிப் பாடசாலைகளுக்கு கொவிட் 19 தொற்று நீக்கி பொருட்கள் பொத்துவில் பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திப் பிரிவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு பொத்துவில் பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்றாத் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்று இருந்தன.
பொத்துவில் பிரதேசத்தில் முன்பள்ளி மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சிறுவர் மகளீர் முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி பாடசாலைகள் உட்கட்டமைப்பு கல்விச் சேவைகள் அமைச்சின் நிதியின் ஊடாக இக் கொவிட் 19 தொற்று நீக்கி பொருட்கள் வழக்கி வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் பொத்துவில் பிரதேசத்தில் இயங்கி வரும் முன்பள்ளிகளுக்கான கொவிட் 19 தொற்று நீக்கி திரவங்கள் மற்றும் பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் இப் பொருட்களை பொத்துவில் உதவிப் பிரதேச செயலாளர் வை.றாசீத் கணக்காளர் ஏ.வி.அப்துல் ரகுமான் ஆகியோர் வழங்கி வைத்துள்ளனர்.