பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக வாவிக்குள் குதித்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0
101

குருணாகல் பிரதேசத்தில், பொலிஸாரின் சோதனை நடவடிக்கையிலிருந்து தப்பிசெல்வதற்காக வாவிக்குள் குதித்த நபர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குருணாகல் நாரம்பொல, தோரயாய பிரதேசத்தை சேர்ந்த 26 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குருணாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாவி சுற்றுவட்டப் பகுதியின் நடைபாதையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பொலிஸார், சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபரை வழிமறித்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த நபர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பி சென்று வாவிக்குள் குதித்துள்ளார். வாவியில் ஐந்து மீற்றர் தூரம் நீந்தி சென்ற அந்நபர் அதன் பின்பு நீரில் மூழ்கியுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு குருணாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.