போதைப்பொருள் விருந்துபசார நிகழ்வு இடம்பெற்ற விடுதி முற்றுகை – 26 பேர் கைது

0
13

பாணந்துறை – மஹபெல்லன பகுதியில் பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் விருந்துபசார நிகழ்வு இடம்பெற்ற விடுதியொன்று முற்றுகையிடப்பட்டது. இதன்போது, 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைதானவர்களில் தனியார் பல்கலைக்கழகமொன்றில் பயிலும், 10 மாணவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களில் 16 பேரிடமிருந்து கஞ்சா மற்றும் ஹேஸ் ரக போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்தின் போது, கைதான அனைவரும் அதிகளவில் போதைப்பொருளைப் பயன்படுத்தி இருந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. காவல்துறை அவசர அழைப்பு பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, அலுபோமுல்ல காவல்துறையினரால் இன்று அதிகாலை குறித்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.