கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 14 ஆம் திகதி நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த மூன்று வாரமாக சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என ஜெமெல்லி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனக்கு சிகிச்சை அளித்து வரும் வைத்தியர்கள் , செவிலியர்களுக்கு, தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.