தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி பன்னு. தனது முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதன் பிறகு பல பட வாய்ப்புகளை கையில் வைத்திருந்த டாப்ஸி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/06/taapse-1602589575-1623133539.jpg)
தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்ஸி வெளிநாட்டு பேட்மிட்டன் வீரர் மதியாஸ் போ என்பவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டாப்ஸி தனது காதலர் மற்றும் சகோதரியுடன் கடந்த ஆண்டு மாலத்தீவுக்கு செஅங்கு காதலருடன் ஆட்டம் போட்ட வீடியோக்கள் மற்றும் பிகினியில் சன்பாத் எடுத்த போட்டோக்களை எல்லாம் வெளியிட்டார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/06/tapsee2-1623133881.jpg)
இந்நிலையில் நடிகை டாப்ஸி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் மதியாஸ் போவுடனான ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் டாப்ஸி. மதியாஸ் போவுடன் உள்ள உறவு குறித்து வெளிப்படையாக அறிவிக்க என்றும் அவருடன் டேட்டிங் செல்வதற்கான காரணம் குறித்தும் கூறியுள்ளார்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/06/taapsee53-19-1505822256.jpg)
அதாவது, சினிமா இண்டஸ்ட்ரியில் உள்ள ஒருவருடன் நான் டேட்டிங் செல்ல விரும்பவில்லை. எனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை தனித்தனியாக வைக்க விரும்புகிறேன். அவர்களின் பிறந்தநாளில் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களுடன் நான் எப்போதும் ஒரு படத்தைப் பகிர்ந்துகொள்கிறேன், என் இன்னர் சர்க்கிளின் ஒரு அங்கமான மத்தியாஸுக்கும் அவ்வாறே செய்தேன் என கூறியுள்ளார். மேலும் தனது திருமணம் குறித்தும் நடிகை டாப்ஸி அந்த நேர்காணலில் மனம் திறந்துள்ளார். அதாவது நான் எப்போது என் தொழிதலில் மெதுவாக செல்கிறேனோ, ஆண்டுக்கு 5, 6 படங்கள் என்று இல்லாமல் 2, 3 படங்கள் என பண்ணும் போது என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு அர்ப்பணிப்பேன் என கூறியுள்ளார்.