மகளிர் ஜூனியர் ஹொக்கி சம்பியனானது இந்திய அணி

0
21

மகளிர் ஜூனியர் ஆசிய கிண்ண ஹொக்கி போட்டியில் இந்திய அணி சம்பியனானது.

9ஆவது மகளிர் ஜூனியர் ஆசிய கிண்ண ஹொக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா – சீனா அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 – 2 என்ற கோல் கணக்கில் சீனாவை வென்று சம்பியனானது.

இந்திய வீராங்கனைகளுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் பரிசு

ஜூனியர் ஆசிய ஹொக்கி சம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

9ஆவது மகளிர் ஜூனியர் ஆசிய கிண்ண ஹொக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 – 2 என்ற கணக்கில் சீனாவை வென்று சம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

இந்த நிலையில், ஜூனியர் ஆசிய கிண்ணம் வென்ற இந்திய மகளிர் அணியை ஊக்குவிக்கும் வகையில் இந்திய ஹொக்கி சம்மேளனம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

இதன்படி, இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்த ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா 2 இலட்சம் ரூபாய் எனவும், ஆதரவு ஊழியர்கள் அனைவருக்கும் தலா ஓர் இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.