மட்டக்களப்பில்இனந்தெரியாத ஆயுததாரிகளால்சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தைசந்திரா அடிகளாரின் 36வது ஆண்டுநினைவஞ்சலி

0
68

மட்டக்களப்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 36வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக அனுஷ;டிக்கப்பட்டது.


சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 36வது ஆண்டு விசேட நினைவஞ்சலி நிகழ்வானது, மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் பல்சமய ஒன்றியத்தின்அனுசரணையில் மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின் சமாதியில் நடைபெற்றது.


நினைவஞ்சலியில்,புளியந்தீவு மரியாள் பேராலய பங்குத்தந்தை நிக்சன் அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், சர்வமத தலைவர்கள்,சிவில் சமூக பிரதிநிதிகள்,அடிகளாரின் குடும்ப உறுப்பினர்கள், பொதுநிலையினர் என பலரும்; கலந்துகொண்டனர்.


இதன்போது அடிகளாரின் சமாதியில் மெழுகுதிரி ஏற்றிப்பட்டு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டு, அடிகளாரின் சேவை நலன் சிறப்புரைகள் இடம்பெற்றன.