மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக வடிகிறது

0
17

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகின்றபோதும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ச்சியாக படகு சேவை முன்னெடுக்கப்படுகின்றது.
கிரானில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மருத்துவம் மற்றும் ஏனைய தேவைகளுக்காக படகு சேவையினைப் பயன்படுத்தி வருகின்றனர்.
கிரான் பிரதேச செயலகப்பிரிவு பிரிவில் வாழும் மக்களின் இயல்புநிலை பாதிப்புற்ற நிலைமையை அவதானிக்க முடிகின்றது.