மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு மீராவேடை பொது நூலகத்தின் வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு

0
95

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் மீராவேடை பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய வாசிப்பு மாத நிகழ்விற்கான
பரிசளிப்பு விழா நிகழ்வு இன்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
மீராவோடை பொது நூலகத்தின் நூலகர் க.ருத்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிராத் ஒதும் இறைவணகத்துடன் நிகழ்வு
ஆரம்பமானது.
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ‘உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது’ என்ற தொணிப் பொருளில் பிரதேச பாடசாலைகள் தோறும் நடாத்தப்பட்ட பல்வேறு போட்டி
நிகழ்சிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
இளம் கண்டுபிடிப்பாளர் மற்றும் சிறந்த வாசகர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சான்றிதழகளும் வழங்கப்பட்டன.
மீராவேடை பொது நூலகத்தில் கடைமையாற்றும் நூலக உத்தியோகஸ்த்தர்கள் விசேட பரிசுப்பொருட்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் அதிதிகளாக சபையின் செயலாளர் எஸ.எம்.சிஹாப்தீன், முன்னாள் தவிசாளர் ஏ.எம்.நௌபர் மீராவேடை அல்ஹிதாய பாடசாலை அதிபர் ஏ.ஜே.மர்சூக்
உட்பட பலரும் கலந்து கொண்டனர்