மட்டக்களப்பு தாந்தாமலைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு

0
16

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை
ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தாந்தாமலை பொலிஸ் காவலரனுக்கு பின்னால் உள்ள வாய்க்கால் பகுதியிலே உயிரிழந்த நிலையில் யானை காணப்பட்டுள்ளது.


யானை 30 முதல் 35 வயதுக்குட்பட்டதாக இருக்காலம் என்றும், தாந்தாமலைப் பகுதியில் உள்ள வயல் நிலங்களை சேதப்படுத்திய
பின்னரே யானை உயிரிழந்ததாகவும் பிரதேச மக்கள் கூறகின்றனர். வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், கால்நடை வைத்தியர்களின் பரிசோதனைகளுக்குப் பின்னர் யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.