மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச சபைக்கு முன்பாக தாழங்குடாவைச் சேர்ந்த ஒருவர் தனக்கு வியாபார அனுமதிப்பத்திரம் தருமாறு கோரி இன்று (09.11.2020) திங்கட்கிழமை போராட்டமொன்றில் ஈடுபட்டர்.
வியாபார அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பித்து அதற்காக பணம் செலுத்தி பற்றுச் சீட்டும் வைத்துள்ளேன். ஆனால் வியாபார அனுமதிப்பத்திரம் தராமல் மண்முனைப் பற்று பிரதேச சபை தவிசாளர் இழுத்தடிக்கின்றார்.
இதனால் இன்று எனது வியாபார அனுமதிப்பத்திரத்தை கோரியே நான் இந்த இந்த சாத்வீக பேராட்டமொன்றை நடாத்துவதாக குறிப்பிட்டார்.
குறித்த நபர் மண்முனைப் பற்று பிரதேச சபைக்கு முன்;பாக அமர்ந்திருந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து குறிப்பிட்ட இடத்துக்கு வந்த காத்தான்குடி பொலிசார் போராட்டம் நடாத்தியவருடனும் மண்முனைப் பற்று பிரதேச சபை தவிசாளருடனும் பேசியதைத்; தொடர்ந்து குறித்த நபர் அங்கிருந்து சென்றார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மண்முனைப் பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் குறித்த நபர் அவரது வியாபார நிலையத்தினை பிழையான முறையில் நிர்மானித்தததால் அக் கட்டட நிர்மானத்தை நிறுத்துமாறு எமது சபை அறிவுறுத்தியது.
கொரோனா சூழலை பயன்படுத்தி இவர் கட்டடத்தை நிர்மாணித்து வமுடித்து விட்டார். இந்த நிலையில் எமது சபையினால் இவருக்க வியாபார அனுமதிப்பத்திரத்தை வழங்க கூடாது என சபையின் 20.04.2020ம் திகதி அமர்வில் 5520ம் இலக்க தீர்மானத்தின் படி இவருக்க அனுமதிப் பத்திரம் வழங்கக் கூடாது என தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் இவருக்கான வியாபார அனுமதிப்பத்திரத்தை வழங்க வில்லை என மேலும் தெரிவித்தார்.