மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் தொற்று நீக்கித் திரவங்கள் விசுறப்பட்டன.
இதன் போது ஓட்டமாவடி மூன்றாம் வட்டார பிரதேசத்தின் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகள் பொது இடங்கள் மற்றும் கடை தெருக்கள் உள்ளிட்ட பொது மக்களின் வீடுகளுக்கும் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.அமீர் தலைமையில் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டது.