மட்டு. கரடியனாறு கொவிட் வைத்தியசாலைக்கு 50 கட்டில்கள் அன்பளிப்பு

0
190

மட்டக்களப்பு கரடியனாறு கொவிட் வைத்தியசாலைக்கு மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஐம்பது கட்டில்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள பத்து நாட்களில் பத்தாயிரம் கட்டில்களை கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு வழங்கும் திட்டத்தின்கீழ் இவ்வாறு 50 கட்டில்கள் இன்று வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின்கீழ் ஏறாவூர் நகர் பிரதேச இளைஞர் சேவைகள் மன்றத்தினரால் தயாரிக்கப்பட்ட பத்து கட்டில்களை பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜூத் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனிடம் கையளித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதேச உத்தியோகத்தர் ஏ.டபிளியு இர்ஷாத் அலி உள்ளிட்ட பலர் இதன்போது பங்கேற்றிருந்தனர்.

களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, ஏறாவூர் நகர் , ஏறாவூர்ப்பற்று மற்றும் கிரான் ஆகிய பிரதேச இளைஞர் சேவைகள் மன்றம் இக்கட்டில்களை தயாரித்து வழங்கியுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரம், பொலிஸார் முப்படையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதால் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.