மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் திருடப்பட்ட வீட்டு உபகரணங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் வீடொன்றில் இடம் பெற்ற திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட தொலைக் காட்சிப் பெட்டி, தையல் இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று நள்ளிரவு காங்கேயனோடை பிரதேசத்தில் வீடொன்றில் கூரைகளை பிரித்து இந்த திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ரஹீம் தலைமையிலான பொலிசார் மேற் கொண்ட விசாரணைகளையடுத்து இத் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்யததுடன் திருடப்பட்ட தொகை;காட்சி பெட்டி, தையல் இயந்திரம் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.