மட்டு.போரதீவுப்பற்று, பாலையடி வட்டை பொது நூலகத்தில் அபிவிருத்தி கூட்டம்

0
207

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வரவு செலவு திட்டம் ஊடாக ஒதுக்கிடுசெய்யப்பட்டுள்ள வட்டாரத்தில் வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டை மக்களுக்கு பயன்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதனடிப்படையில் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் வகையிலான கூட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் போரதீவுப்பற்று பிரதேச சபை பாலையடி வட்டை பொது நூலகத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட 10 வட்டாரங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட 10 வட்டார உறுப்பினர்களுக்கும் 4 மில்லியன் ரூபா ஒவ்வொரு வட்டாரங்களுக்கு அபிவிருத்தி வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கான அபிவிருத்திக்கான திட்ட முன்மொழிவுகள் கூட்டம் இடம்பெற்றன இதில் போரதீவுப்பற்று பிரதேச செயலக கிராமத்துக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம அபிவிருத்தி சங்கங்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.