28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.மாவட்டத்தின் பாடசாலைகளில் சிறுவர் தின , நவராத்திரி தின நிகழ்வுகள்

திருக்கோயில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரி ஆராதணை மண்டபத்தில் நவராத்திரி தின நிகழ்வுகள் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ஜே. ஆர். டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில்
இடம்பெற்ற நவராத்திரி தின நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் வினாவிடை போட்டி வில்லுப்பாட்டு என்பன இடம்பெற்றது.நிகழ்வுகளுக்கு அதிதிகளாக பாடசாலையின் அபிவிருத்தி செயலாளர்.எஸ்.பி.அகிலன் மற்றும் பாடசாலையின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் திரு.எம்.கிருபராஜா மற்றும் திரு.பெ.தணிகாசலம்
பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் சிறப்பு நிகழ்வுகளும், விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று பாடசாலை அதிபர் றிசாத் தலைமையில் இடம் பெற்றது.


நிகழ்விற்குப் பிரதம அதிதியாக தொழிலதிபரும், ஆசிய அபிவிருத்தி மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட சிரேஸ்ட ஆலோசகருமான றிசாத் சரீப் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் இராமக்குட்டி கல்முனைப் பொலிஸ் நிலையப் பிரதானபொலிஸ் பரிசோதகர் வாஹிட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் போசாக்கு, பாதுகாப்பு, துஸ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர் ஊர்வலமும் முன்னெடுக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களை உள்ளடக்கிய ஏறாவூர் – ஐயங்கேணி ஹிஸ்புல்லா வித்தியாலயத்தில் வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட விசேட விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.பாடசாலை அதிபர் எச்எம்எம். பசீர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சமூக விழிப்புணர்வாளரும் வர்த்தகப் பிரமுகருமான முகமட் பிர்தௌஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் ஆசிரிய வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளர் ஏ. றியாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.தேசிய கொடியை ஏந்திய மாணவர்கள் பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம் ஐயங்கேணிக்கிராம உள்ளக வீதி வழியாகச் சென்று புன்னக்குடா வீதியை அடைந்து அங்கிருந்து மீண்டும் பாடசாலை வளாகத்தை வந்தடைந்தனர். ஊர்வலத்தை தொடர்ந்து மாணவர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்றதுடன் இவ்விளையாட்டுக்களில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுப்பொதிகளும் வழங்கப்பட்டது.

அம்பாரை திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தம்பிலுவில் தேசிய பாடசாலையில் வாணிவிழா மற்றும் முத்தமிழ் கலை விழா இன்று பாடசாலையில் இடம்பெற்றது.பாடசாலை அதிபர் பா.சந்திரேஸ்வரன் தலைமையில் துறைசார் ஆசிரியர்களின் நெறிப்படுத்தலில் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற் நிகழ்விற்கு பிரதேசத்தில் இருந்து சிறப்பு அதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் முப்பெரும் தேவியர்களுக்குமான விசேட பூஜைகள் வழிபாடுகள், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.தொடர்ந்து பாடசாலையின் ஆன்மீக குரு சுவாமி நித்தியானந்தாவின் ஆசீயுரை, அதிதிகளின் உரைகள் இடம்பெற்று பிரதேச மற்றும் மாகாண மட்டங்களில் கலைப் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலைகளும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்.இரவீந்திரன் ஆன்மீக நிறுவனங்களின் தலைவர்கள் ஊடகவியலாளர்கள் சமுக கல்வி செயற்பாட்டாளர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் நவராத்திரி விசேட பூசை வழிபாடுகள் வித்தியாலய அதிபர் க.செல்வராசா தலைமையில் நடைபெற்றது.
மாணவர்களின் பஜனை , பேச்சு, ஆகயன இடம்பெற்றதுடன் இங்கு விசேட சொற்பொழிவினை இந்துப் பிரசாரகர் அகரம் செ.துஜியந்தன் நிகழ்த்தினார். வுhணிவிழாவை முன்னிட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்ட்டன. விசேட பூசை வழிபாடுகளை சிவஸ்ரீ ரதிகர சர்மா நிகழ்த்தினார்.

நாளை விஜய தசமி அன்று புதிதாக மாணவர்களுக்கு ஏடு தொடக்குதல், கும்பம் சொரிதல் ஆகியவவை இடம்பெறவுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles