24 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி

சீன அரசு அதிவேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்லூப் ரயிலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு டத்தோங் நகரில், இதற்கு என்று 2 கி.மீ தொலைவுக்கு ரயில்தடத்தை உருவாக்கியது.

இந்நிலையில், இந்த வழித்தடத்தில் அதிவேக ரயில் சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்த அதிவேக ரயில் மாக்லேவ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயற்படக் கூடியது. ரயிலின் சக்கரம் தண்டவாளத்துடன் உராய்வு கொள்ளாது. இதனால், இந்த ரயிலால் விமானத்துக்கு நிகரான வேகத்தில் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த அதிவேக ரயில் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சீனத் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் இடையே உள்ள 1,200 கி.மீ தூரத்தை 90 நிமிடங்களில் கடக்க முடியும். தற்போது சீனாவில் பயன்பாட்டில் இருக்கும், மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் மூலம் பெய்ஜிங்கிலிருந்து-ஷாங்காய்க்கு 4.18 மணி நேரத்தில் செல்ல முடியும்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles