மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக 905 பேர் கைது!

0
188

ஏப்ரல் 18 பிற்பகல் 12 மணிமுதல் நேற்று காலை 6 மணிவரையான 18 மணிநேரக் காலப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்காக 905 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 6,898 மோட்டார் வாகன வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவற்றுள் அதிகமான வழக்குகள் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் தொடர்புடையவை ஆகும்.