கடந்த 2006 ஆம் ஆண்டில் பெலியத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2024/07/download-2-1.jpeg)
தங்காலை மேல் நீதிமன்ற நீதவான் உதேஷ் ரணதுங்கவினால் இன்று இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பெலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப் குமார என்ற 41 வயதுடைய நபரொருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரணசிங்க ஆராச்சிகே தினுஷா லக்மாலி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.